பசுவை மட்டும் வழிபாட்டுக்குரியதாக கருதுவது ஏன்?
பசுவை மட்டும் வழிபாட்டுக்குரியதாக கருதுவது ஏன்?
எட்டிக்காயும் இறைவன் படைப்பே. எள்ளும் அவன் படைப்பே. அன்னாசிப்பழமும் அரளிக்காயும் அவன் படைப்பே. இருந்தாலும், எள்ளும் அன்னாசிப் பழமும் மனிதருக்கு ஏற்றதாக இருப்பது போல எட்டிக்காயும், அரளிக்காயும் இன்னும் பலவும் இல்லை.
அருவி நீரும், ஆற்று நீரும், கிணற்று நீரும், கடல் நீரும், குளத்து நீரும், நீர் தான் என்றாலும், எல்லா நீரும் அனைத்து மனிதர்க்கும் ஒரே அளவிலும், எப்பொழுதும் எல்லாத் தேவைகளுக்கும் பயன் படுவதாக அமையவில்லை.
தொன்றுதொட்டு மனித இனம் தான் கண்டவற்றில், சிலவற்றையே மிக்க பயன் அளிப்பதாக அனுபவித்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே, அவற்றை போற்றி பாராட்டி தெய்வமாகவும் வழிபட்டு வந்திருக்கின்றது..
மரங்களில் வாழையையும், தென்னையையும், வேம்பையும், நம்மிடம் நன்றி பாராட்டுவதில் நாயையும் போற்றுவது போல, பசுவையே எல்லா இனங்களுக்கும் மேலாக வணங்கி, அட்சய பாத்திரமாக வற்றா ஊற்றாக போற்றி வருகிறது.
வேறு எதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் இந்து மதம் அளித்து வந்திருக்கிறது.
பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல், பசுத்தாய், கோமாதா என்று வழங்கி வந்திருக்கிறது.
பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே மிருகம் பசு மட்டுமே.
3. ஐக்கிய ஸ்வரூபம் கோமாதா
எல்லாமே இறை வடிவம் என்றாலும், நாம் தொன்றுதொட்டு, சிலவற்றிலேயே, சில வடிவங்களிலேயே, அனைத்து குணங்களின் ஐக்கியத்தை உணர்ந்திருக்கிறோம்.
அர்த்த நாரீஸ்வரரில் சிவ-சக்தி ஐக்கியத்தையும்,
சங்கர நாராயணரில் சிவ-விஷ்ணு ஐக்கியத்தையும்,
லக்ஷ்மி நாராயணரில் விஷ்ணு-லக்ஷ்மி ஐக்கியத்தையும்,
நரசிம்மரில் மனித-மிருக ஐக்கியத்தையும்,
தாணுமாலயனில் ஹரி-ஹர-ப்ரும்ம ஐக்கியத்தையும்,
கணபதியில் யானை-தேவர்கள் ஐக்கியத்தையும்,
ஏகபாத த்ரிமூர்த்தியில் மூவரின் இணைவையும் காண்கிறோம்.
பலவற்றுள் ஐக்கியப்பாடு வெளிப்படையாக தெரியாவிட்டாலும் எல்லாமே சர்வ குண ஐக்கிய வடிவமே. யாவுமே நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஒவ்வொரு வகை அளவு கலவை வடிவமே.
ஆணும் பெண்ணும் வித்தியாசமாக தோன்றினாலும், இரு பாலாருமே 45 'X' 'Y' க்ரோமசோம்களின் கூட்டே. இவற்றில் ('X' 'Y' - ல்)ஒன்று கூடினால் ஆண் என்றும், மற்றொன்று கூடினால் பெண் என்றும் கூறுகிறோம்.
ஒவ்வொரு ஜீவ அணுவின் அடிப்படை அமைப்பான DNA, ஒரு மனிதரின் பல்லாயிரக் கணக்கான மூதாதையர்களின் குணங்களை உள்ளடக்கி இருப்பது போலவும், மிகச்சிறிய ஆலம் விதை பிரும்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போலவும், ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒருமை வடிவமாகும்.
இங்கு ஒரு முக்கியமான செய்தியை கவனிக்க வேண்டும். இந்து மதம் பசுமாட்டைத் தவிர வேறு எந்த இனமும் தெய்வசக்தியற்றது என்று கூறவில்லை.
காலையில் எழுந்தவுடன் நம் உள்ளங் கைகளைப் பார்த்து நுனிப்பகுதியில் மகாலக்ஷ்மியும், இடையில் சரஸ்வதியும், கணுப்பகுதியில் பார்வதியும், (முச்சக்திகளும் இருப்பதை) நினைவுபடுத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது.
எனினும் தோட்டத்துக் கனியை அறியாமல் இருப்பதே பொது குணம் என்பதால் நாம் நம்மை அறிவதற்கு ஏதுவாக பரம்பொருளை, முதலில் பிறவற்றில் இருப்பதை உணர, பல வழிவகைகளை இந்து மதக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இவ்வடிப்படையில் தோன்றியதே கோபூஜை (பசு வழிப்பாடு).
உலகில் உள்ள கோடிக்கணக்கான கீரை, காய், கனிகளையும், தெரிந்த பின்னரே சிலவற்றை உபயோகிப்போம் என்பதில்லை.
நமக்கு நன்மை அளிப்பதாக அறிந்ததை உடனே பயன்படுத்திடுகிறோம்.
இது போல பூச்சி முதல் பிரும்மாண்டமான இனம் வரை, ஒவ்வொன்றின் தெய்வ அம்சத்தை உணரும் வரை காத்திராமல், பசுமாடு போன்று, தெய்வாம்சம் அறியப்பட்ட இனங்களை வழிபட்டு பயன் பெறுவதே அறிவுடைமை.
நன்மை அளிப்பதாக அறிந்ததை மறந்திடக் கூடாது என்றும் கிடைத்த கனியை நழுவவிடக் கூடாது என்பதற்காகவும் துவங்கப்பட்டு தொடர்வதே கோமாதா பூஜையாகும்.
எல்லோரும் தத்தம் வீட்டிலேயே, பசு வழிபாடு செய்ய இயலாதிருக்கலாம் என்றே ஒவ்வொரு ஆலயத்திலும், பசுத்தொழுவம் அமைத்து, அன்றாடமும், கோபூஜை நடத்தும் மரபு ஏற்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆலயத்திலும் "கோ சாலை" (பசு மடம்) இருந்தால் அருகில்வாழ் மக்கள் அனைவரும் பசு பராமரிப்பிலும், பசு வழிபாட்டிலும் கலந்து கொள்ள முடியும்.
தினமும் பசுமடத்தில் விரிவான பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வது மேன்மை. அதோடு, முக்கிய நாட்களில் அல்லது பல்லோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நாட்களில், பெரிய அளவில் 108 கோ பூஜை, 1008 கோ பூஜை செய்யலாம். ஆலயத்திற்கு மட்டுமின்றி, அருகுள்ள மக்களுக்கு மட்டுமின்றி அகிலத்திற்கே அனைத்து நன்மையும் அளிக்கும்.
பசுத்தாய் - கோமாதா (பெருமையும், பராமரிப்பும், பூஜையும்)
பாரதத்தில் வேதகாலம் தொடங்கி, இன்று வரை, பசுவின் (கோமாதாவின்) பெருமையையும், அதனைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும், பசு இனத்தை வழிபாடும் முறைகளையும், தெரிவிக்காத இறை நூல்களே இல்லை எனலாம்.
- அவனருள்
புராணங்களில் (வரலாறுகள்) மற்றும் இறை இலக்கியங்களில், பசுவை போற்றியவர்கள், பராமரித்தவர்கள், காப்பாற்றியவர்கள் அடைந்த நன்மை நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. அவற்றை தொகுப்பதோ, முக்கியமானவற்றை நினைவு கூறுவது மட்டுமோ நோக்கம் அல்ல.
நம் நன்மை நாடி நாம் பசுவை ஆதரிக்க வேண்டும் என்பதை விட, பசுக்களைப் பராமரிப்பது நம் கடமை என்பதை வலியுறுத்துவதே நோக்கமாகும்.
கோ பூஜையினால், கோ தானத்தினால் அடையும் நன்மைகள் தெரிவிக்கப்பட்டிருப்பினும், பசுப்பராமரிப்பு நம் அனைவரின் அதி அவசரமான அவசியமான பணியாகும் என்று எல்லோரும் உணர வேண்டும்.
பசு வழிபாடு மூட நம்பிக்கை அல்ல; நம் மூதாதையர்களின் அறிவுடைமையால் உருவான மிக முக்கியமான செயல்பாடே. நவீன வாழ்முறை மோகத்தினால், பண்டையோர் விஞ்ஞான அடிப்படையில், மெய்ஞானமும் கூட்டுவதாக அளித்துள்ள பாரம்பரியப் பண்பாட்டை மறவாதிருக்க, பின்பற்றிட இறையருள் வைக்கட்டும்.
- அவனருள்
பசு (கோமாதா) வழிபாடு.
மேற்கத்திய வரலாற்று இயல் காலத்துக்கும் முன்பிருந்தே "சனாதன தர்மம்" என்ற இந்துமதம், "எல்லாம் இறை மாயம்" என்றும் "தத்வமசி" அதாவது "நீயும் பரம்பொருளே" என்றும் "அத்வைதம்" - எல்லாம் ஒன்றே - அதாவது "பரம்பொருள் இன்றி வேறொன்றும் இல்லை" என்றும் "காண்பவை எல்லாம், கடவுளின் எண்ணற்ற தோற்றங்களே" என்றும் கூறி வந்திருக்கின்றது.. இந்நிலையில்,
மிருக இனங்களில், பசுவையும், யானையையும்,
ஊர்வனவற்றில் நாகப் பாம்பையும்,
தாவர இனத்தில் அரசு, வேம்பு, போன்ற சிலவற்றை மட்டும்,
மிகச் சிறப்புடையதாக, நம்மிலும் மேலாக, தெய்வங்களாக,
தொன்று தொட்டு வழிபட்டு வருவதும்,
அவ்வழக்கத்தை தொடர்ந்திட வேண்டும் என்று கோருவதும்,
பாரபட்சமற்ற செயல் தானா?
ஞாயமான பரிந்துரை தானா?
இந்துக்கள், பசுவையையும், யானையையும், பாம்பையும், வேம்பையும் சிறப்புடையதாகப் போற்றி வந்திருக்கின்றனர் தவிர, பிறவற்றை இழிவு படுத்தவில்லை, அழிக்கச் சொல்லவுமில்லை.
எந்த சிற்றின உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்றும் அவற்றைப் போற்றிப் பேண வேண்டும் என்றுமே இந்துக்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.
திருக்குளங்களில் மீன்களுக்கு இரை போடுவதும், ஈ, எறும்பு, எலி போன்றவற்றுக்கு உணவாக வாசலில், வாயிற்படிகளில் பச்சரிசி மாக்கோலம் போடுவதும், புற்றுகளில் பாம்புக்குப் பால் வைப்பதும், அன்றாடம் பகலில் காக்கைக்கு உணவளிப்பதும், இரவு வேளையில் நாய்களுக்கு உணவளிப்பதும், பறவைகளுக்கு உணவாக நேர்கதிர்களைத் தொங்கவிடுவதும், இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகிறது.
இதோடு, சிற்றினங்களை நமக்குச் சமமாக மட்டுமின்றி, மேலானவையாகவும் நாம் கருத வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான தெய்வங்களின் வாகனங்கள் மிருகங்களாகவே, பறவைகளாகவே இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளன.
- விநாயகன் யானைத்தலையன்
- அவன் ஆட்கொண்டு அமர்ந்திருப்பது மூஞ்சூறு
- தம்பி முருகன் மகிழ்ந்து வருவது மயிலில்
- தகப்பன் சிவன் அணிந்திருப்பது நாகம்
- மாமன் திருமால் படுப்பது பாம்பணையில்
- அவன் ஏறும் வாகனம் கருடன்
- எடுத்த உருவங்கள் மீனும், பன்றியும், சிங்கமும்
- தர்மதேவன் வருவது எருமையின் மீது
- சனீஸ்வரனை சுமப்பது காகம்
இப்படி நூற்றுக் கணக்காக பட்டியலிடலாம்.
மேலும், பல இனங்களின் நிலையை ஆய்ந்து, சிலவற்றை, உதாரணமாக, பூரான் தாய்க்கு ஒரு பிள்ளை என்பதற்காக கொல்லப்படக்கூடாது என்றும் வழக்கம் இருக்கின்றது.
கோமாதா நம் குலமாதா!
பசு பிரசவிக்கும்போது கன்றின் தலைதான் முத லில் வரும். இந்த நிலையில், இரண்டு தலைகள் கொண்ட பசுவை பார்ப்பதுபோல் இருக்கும். அதாவது முன்பக்கமும், பின்பக்கமும் தலைகள் இருப்பது போல் காணலாம். பசு இப்படிக் காட்சி தருவதை 'உபயதோமுகி' என்பர். இந்தக் காட்சியை தரிசிப்பது பெரும் புண்ணியம். இந்த தருணத்தில், பசுவை வலம் வந்து வணங்கினால் நமது சகல பாவங்களும் நீங்குவதுடன், ஈரேழு பதினான்கு உலகங்களிலும் உள்ள சகல தேவதைகளையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
கன்றுக்கு பால் இல்லாமல், பசுவிடம் இருந்து பால் முழுவதையும் கறந்து விடுபவன், நரகத்தை அடைந்து வேதனையுறுவான். தவிர, மறுபிறவியிலும் மனிதனாகவே பிறந்து, பட்டினியுடனும் நீர் அருந்தவும் முடியாத நோயாளியாகவும் கிடந்து துன்பப்படுவான்.
நெற்றியில் குங்குமப் பொட்டு அளவுக்கு சுழியுடன் திகழும் பசுக்கள் வீட்டில் இருப்பது பெரும் பாக்கியம். அந்த வீட்டில் திருமணம், பிரசவம் போன்ற சுப காரியங்கள் அடிக்கடி நடைபெறும்.
கிராமப் பகுதிகளில் பசுக்களை மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம். பசுக்களுடன் ஓர் ஆசாமியும் உடன் செல்வான். ஆடி மாதத்தில் ரோகிணி நட்சத்திர நாளில்... மேய்ச்சலுக்குச் சென்று திரும்பும் பசுக்களில், சிவப்பு நிற பசு ஒன்று முதலில் ஓடி வந்து தொழுவத்தில் நுழைந்தால் அந்த வருடம் அதிகம் மழை பொழியும் என்பது ஐதீகம்.
வீட்டில் பசு இருப்பதால், ஐஸ்வர்யம் பெருகும். பசு மாட்டை விற்பதாக இருந்தால், அதை, கட்டி இருக்கும் தாம்புக் கயிற்றுடன் கொடுக்கக் கூடாது. கயிறை நாம் வைத்துக் கொண்டு பசுவை மட்டுமே கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், வேறு பசுக்கள் உடனடியாக நம் இல்லம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
கோமாதாவும் பூமாதாவும் :-
காஞ்சி மஹா பெரியவர் அருளியது
ஜனக மாதாவும், கோமாதாவும் பாலைச் சுரக்கிற மாதிரி தானியங்கள், உலோகங்கள், தாதுக்கள் ஆகிய வளங்களையும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீர்வளம் என்பதையும் பூமி சுரக்கிறது. அதனால் தான் பூமாதா என்பது, பசுத்தாய் என்பது போல் புவித்தாய்.
மிருகமாகத் தெரிகிற பசு, ஜடமாகத் தெரிகிற பூமி ஆகிய எல்லாவற்றிலும் உயிருள்ளதும் அன்பே உருவமானதுமான மாத்ருத்வத்தை - தாய்த் தத்துவத்தை - கண்டு கொண்டு நம்முடைய முன்னோர்கள் கோமாதா என்றும் பூமாதா என்றும் சொன்னார்கள்.
பூமாதாவே கோமாதாவாக உருக்கொண்டதும் உண்டு. த்வாபரயுகம் முடிகிற நிலைக்கு வந்து கலியுகம் ஆரம்பிப்பதற்கு முந்தைய சமயம். லோகத்திலே துஷ்ட அரசர்களின் ரூபத்தில் அசுர சக்திகள் தலையோங்கிய அப்போது பூமாதேவியால் அந்தப் பாபபாரத்தைத் தாங்க முடியவில்லை.
அப்போது பூமாதேவியும், அவளுடைய சார்பிலே பிரம்மாவும் மஹா விஷ்ணுவிடம் முறையிட்டு பிரார்த்தித்துக் கொண்டதன் மேல் தான் பகவான் க்ருஷ்ணாவதாரம் பண்ணினார். அந்த சமயத்திலே, தன்னுடைய முறையீடு பகவானுடைய மனசைத் தொட்டு இறக்கி, அவரை ரக்ஷணத்துக்கு வரும்படிப் பண்ண வேண்டுமானால் தான், அவருடைய பத்னியான பூமாதேவி ரூபத்திலில்லாமல், அதை விட ப்ரியத்துக்கும் பரிவுக்கும் உரிய தாயான கோமாதா ரூபத்தில் இருந்தால் தான் முடியும் என்பதால் பூமாதாவே கோமாதாவாக உருவம் எடுத்துக் கொண்டு தான் போனாள் என்று புராணக்கதை இருக்கிறது. அதற்கேற்பத் தான் பகவான் கோபாலனாகப் பிறந்து, அந்த அவதாரத்தில் கோக்களோடு அத்யந்தமாக உறவாடினார்.
"கோ" என்றாலே பூமி என்றும் ஒரு அர்த்தம்.
கிருஷ்ணர் பூர்ணாவதாரம். அம்சாவதாரம் என்பதாக பகவான் தன்னுடைய ஒரொரு அம்ச கலையை மட்டும் வெளிப்படுத்தியும் அவதாரங்கள் நிகழ்த்தியதுண்டு. பாகவதத்தில் சொல்லியிருக்கிற கணக்குப்படி பகவானுக்கே இருபத்தி நாலு அவதாரங்கள். அந்த இருபத்து நாலில் நம் எல்லோருக்கும் தெரிந்த தசாவதாரங்கள் போகபாக்கியிருக்கிற பதினாலு பேரும் அம்சாவதாரங்கள். அப்படி பகவானின் அம்ச அவதாரங்களாக இருந்தவர்களில் ப்ருது என்கிற சக்ரவர்த்தியும் ஒருத்தர். அவர் தான் லோகத்தில் நாடு, நகரம் என்ற அமைப்புகளை முறைப்படி ஏற்படுத்தியவர். அவர் பூமாதாவையே கோமாதா ரூபத்தில் கண்டு அந்த பசுத் தாயிடமிருந்து அவரவர்களும் தங்கள் தங்களுக்கு இஷ்டமான சம்பத்துக்களை தங்கள் தங்கள் ஸ்ஸ்வதர்மம் என்ற கன்றைக் கொண்டு கறந்து கொள்ளச் செய்தார் என்று பாகவதத்தில் சொல்லியிருக்கிறது.
கோ ரூபத்தில் பகவானுக்கு எததனை ப்ரீதி என்பதற்காகச் சொன்னேன். கோவுக்கும் அவரிடத்தில் அதேபோல் ப்ரீதி வேணுகோபாலனாக பகவான் இடது பாதத்தை பூமியில் ஊன்றிச் செங்குத்தாக வைத்துக் கொண்டிருக்கும் போது தாமரை மாதிரியான அவருடைய உள்ளங்காலை ஒரு கோ நக்கிக் கொண்டிருக்கும். சித்ரங்களில் அப்படி போட்டிருக்கும்.
மாட்டுப்பொங்கல் இடுவது ஏன்?
வாயில்லா ஜீவன்களில் மனித சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து நிற்பது பசு என்றால்
அது மிகையில்லை. காலையில் எழுந்ததும் "பால் வந்து விட்டதா?" என்பது தான் நம்
முதல் கேள்வியாக இருக்கிறது. அன்போடு வாஞ்சையாக "அம்மா'' என்று பசு அழைக்கிறது.
ஆனால், உண்மையில் நம் எல்லோருக்கும் பசுவே தாயாக இருந்து பால் தந்து காக்கிறது.
பெற்ற தாய் கூட இரண்டு வயது வரை தான் பால் தருவாள். ஆனால், எத்தனை வயதானாலும்
பசுவின் பால், மோர், தயிர், நெய் நம் உணவில் சேர்த்துக் கொள்ள மறப்பதில்லை.
வயதாகி சாப்பிட முடியாத நிலை வரும் போது, பசும்பால் மட்டுமே நமக்கு
கைகொடுக்கிறது. உயிர் வெளியேறத் துடிக்கும் போது, குழந்தைகளெல்லாம் வாயில் பால்
ஊற்றுகிறார்கள். இறந்த பிறகு சமாதியிலும் பால் ஊற்றுகிறார்கள். இப்படி பிறப்பு
முதல் இறப்புக்குப் பிறகும் நம்மை வளர்த்து ஆளாக்கிய தாயான பசுவுக்கு
நன்றிக்கடன் செலுத்தும் நோக்கத்திலேயே மாட்டுப்பொங்கல் இடப்படுகிறது. அதனால்
தான் அதனை "கோமாதா'' என்று அழைக்கிறோம்.
பசுவுக்காக வாழ்ந்த சித்தர் :-
திருவாவடுதுறைக்குத் தெற்கே உள்ள சாத்தனூர் என்னும் ஊரில் மூலன் என்னும்
இடையன் வாழ்ந்து வந்தான். தான் வளர்த்து வந்த பசுக்கள் மீது மிகுந்த அன்பு
கொண்டிருந்தான். பசுக்களும் மூலன் மீது தன் அன்பைப் பொழிந்தன. ஒருநாள் காட்டில்
மேய்ச்சலுக்கு சென்றபோது, ஒரு பாம்பு மூலனைத் தீண்டியது. அவன் இறந்து விட்டான்.
மூலனை விட்டுப் பிரிய மனமில்லாத பசுக்களின் கண்களில் கண்ணீர் பெருகியது. அவனைச்
சுற்றிச் சுற்றி வந்து கதறி நின்றன. வான் வழியே சென்று கொண்டிருந்த சிவயோகியான
சித்தர் ஒருவர் இக்காட்சியைக் கண்டு பசுக்கள் மீது இரக்கம் கொண்டார்.
பசுக்களின் கண்ணீரைத் துடைக்க எண்ணம் கொண்டார். "பரகாயப்பிரவேசம்" என்னும்
கூடுவிட்டுக் கூடுபாயும் முறையில் மூலனின் உடம்பில் புகுந்தார். அதுவரை மூலனாக
இருந்த அந்த உடல், சித்தரின் புனித சேர்க்கையால் "திருமூலர்" என்ற பெயர்
பெற்றது. அவர் புகழ் பெற்ற சித்தர் ஆனார். தன் மீது அன்புகாட்டிய மூலன்
உயிர்த்தெழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ச்சியில் திளைத்தன. காலையிலிருந்து
பசும்புல் உண்ணாமல் வாடி நின்ற பசுக்கூட்டங்களை திருமூலர் நீர் அருந்தச் செய்து,
வயிறார மேயச் செய்து ஊர்போய் சேர்ந்தார். இவர் எழுதிய பாடல்கள் "திருமந்திரம்"
என்று போற்றப்படுகிறது.
பசுக்குலத்திற்கே பெருமை :-
அப்பர் தேவாரத்தில் ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
என்று பாடுகிறார். "ஆ" என்றால் பசு; "அஞ்சாடுதல்" என்றால் "பஞ்சகவ்யத்தால்
அபிஷேகம் செய்தல்". பஞ்சகவ்யம் என்பது பசுவிடமிருந்து உண்டாகும்
- பால்
- தயிர்
- நெய்
- கோமியம் (பசுவின் ஜலம்)
- கோமயம் (பசுஞ்சாணம்)
என்னும் ஐந்து பொருள்களும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் சேர்ந்த கலவையே
பஞ்சகவ்யம் எனப்படும்.
இதுதவிர,
- பாலபிஷேகம்
- தயிர் அபிஷேகம்
- நெய்யபிஷேகம்
என்று தனித்தனியாகவும் சிவபெருமானுக்குச் செய்வதும் உண்டு.
திருவையாறு அருகிலுள்ள "தில்லைஸ்தானம்" என்னும் தலத்தில் இருக்கும்
பெருமானுக்கு நெய்யபிஷேகம் சிறப்பாகும். தில்லைஸ்தானம் என்னும் இத்தலம்
தேவாரத்தில் திருநெய்த்தானம் என்று குறிக்கப்பட்டுள்ளது. பஞ்சகவ்யத்தால்
சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது பசுக்குலத்திற்கே பெருமை என்று அப்பர்
குறிப்பிடுகிறார். பால் அபிஷேகத்தை "கோசிருங்கம்" எனப்படும் பசுக்கொம்பினால்
செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
*சாத்வீக** **உணவு**:* சாதுவான பிராணியான பசுவினைத் தெய்வமாகக் கருதி வழிபாடு
செய்கிறோம். பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல் மனிதசமுதாயத்திற்கு மகத்தான
உணவுப்பொருளாகப் பாலைத் தருகிறது. உணவு வகையில்,
- சாத்வீகம் (சாந்தம்)
- இராட்சசம்(மிருகம்)
- தாம்சம் (மந்தம்)
என்று முக்குணங்களை ஏற்படுத்தும் பொருள்கள் உண்டு.
இதில் பசுவின் பால் சாத்வீக உணவாகும். பால் பசுவின் இரத்தம் என்பதால் அதுவும்
அசைவம் தானே என்ற அபிப்ராயம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால்,
சாஸ்திரத்தில் பசும்பால் சாத்வீக உணவு என்றே குறிக்கப்பட்டுள்ளது. பாலைக்
கொடுப்பதால் பசுவிற்கு ஹிம்சை எதுவும் இல்லை. அது நம் அறிவை துலங்கச் செய்கிறது.
பல சாதுக்கள், பசும்பாலை ஆகாரமாகக் கொண்டு உதாரணமாக வாழ்ந்து
காட்டியிருக்கிறார்கள். முக்குண உணவுகளைப் பற்றி விவரிக்கும் கீதையை போதித்த
கிருஷ்ணர், ஆயர்பாடியில் பாலையும், வெண்ணெயையும் திருடிச் சாப்பிட்ட
நவநீதகிருஷ்ணனாக இருந்திருக்கிறார்.
இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர். பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாகக் கருதுகின்றனர்.
*பசுவின் கொம்புகளின் அடியில் – பிரம்மன், திருமால்
*கொம்புகளின் நுனியில் – கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்
*சிரம் – சிவபெருமான்
*நெற்றி நடுவில் – சிவசக்தி
*மூக்கு நுனியில் – குமரக் கடவுள்
*மூக்கினுள் – வித்தியாதரர்
*இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்
*இரு கண்கள் – சந்திரர், சூரியர்
*பற்கள் – வாயு தேவர்
*ஒளியுள்ள நாவில் – வருண பகவான்
*ஓங்காரமுடைய நெஞ்சில் – கலைமகள்
*மணித்தலம் – இமயனும் இயக்கர்களும்
*உதட்டில் – உதயாத்தமன சந்தி தேவதைகள்
*கழுத்தில் – இந்திரன்
*முரிப்பில் – பன்னிரு ஆரியர்கள்
*மார்பில் – சாத்திய தேவர்கள்
*நான்கு கால்களில் – அனிலன் எனும் வாயு
*முழந்தாள்களில் – மருத்துவர்
*குளம்பு நுனியில் – சர்ப்பர்கள்
*குளம்பின் நடுவில் – கந்தவர்கள்
*குளம்பிம் மேல் இடத்தில் – அரம்பை மாதர்
*முதுகில் – உருத்திரர்
*சந்திகள் தோறும் – எட்டு வசுக்கள்
*அரைப் பரப்பில் – பிதிர் தேவதைகள்
*யோனியில் – ஏழு மாதர்கள்
*குதத்தில் – இலக்குமி தேவி
*வாயில் – சர்ப்பரசர்கள்
*வாலின் முடியில் – ஆத்திகன்
*மூத்திரத்தில் – ஆகாய கங்கை
*சாணத்தில் – யமுனை நதி
*ரோமங்களில் – மகாமுனிவர்கள்
*வயிற்றில் – பூமாதேவி
*மடிக்காம்பில் – சகல சமுத்திரங்கள்
*சடாத்களியில் – காருக பத்தியம்
*இதயத்தில் – ஆசுவனீயம்
*முகத்தில் – தட்சிணாக்கினி
*எலும்பிலும், சுக்கிலத்திலும் – யாகத் தொழில் முழுவதும்
*எல்லா அங்கங்கள் தோறும் – கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்
Posted by தெய்வீக விளக்கங்கள் at 4:28 AM 0 comments
ஒரே விநாடியில் அன்னதானம் செய்ய விரும்புகிறீர்களா?
ஒரே விநாடியில் அன்னதானம் செய்ய விரும்புகிறீர்களா?
தானங்கள் 8 வகைப்படும்.அதில் மிக எளியது;நாம் ஒவ்வொருவரின் கர்மத்தையும்(நாம் செய்த பாவங்களுக்கான பலனை அனுபவித்தல்) அழிக்கும்திறன் அன்னதானத்திற்கு உண்டு.
வீடு,வாசல் இல்லாத அனாதைகளுக்கு செய்யும் தானம் மட்டுமே அன்னதானம் ஆகும்.
www.thehungersite.com என்ற தளத்திற்குச் சென்றால் ஹோம் பக்கத்தில் அதாங்க முதல் பக்கத்தில் ஒரு ஆரஞ்சு நிற செவ்வகம் இருக்கும்.அதில் சுட்டொலியை வைத்து ஒரு க்ளிக் செய்துவிட்டால் போதும்.அடுத்த பக்கத்தில் சில விளம்பரங்களை நாம் பார்ப்போம்.அந்த விளம்பரத்தில் உள்ள நிறுவனங்கள் மேற்கூறிய இணைய தளத்திற்கு பணம் தரும்.அதில் ஒரு ஆளுக்கு(அனாதைக்கு) ஒருநாளுக்குத் தேவையான உணவை தந்துவிடுவர்.இது வெளிநாட்டில் உள்ள இணையதளம்.
இதே போல,நமது இந்தியாவிற்குள்ளிருந்து அன்னதான தளம் ஒன்று இயங்குகிறது.அதன் பெயர் www.bhookh.com
Posted by தெய்வீக விளக்கங்கள் at 4:25 AM 0 comments
Thursday, November 29, 2007
மந்திர உச்சாடனம்
மந்திர உச்சாடனம்:-
"ஓம்"கார நமசிவாய "மூலமந்திரம்"
ஓம் ஓம்கார நமசிவாய ஓம் நகாராய நமசிவாய
ஓம் மகாராய நமசிவாய ஓம் சிகாராய நமசிவாய
ஓம் வகாராய நமசிவாய ஓம் யகாராய நமசிவாய
ஓம் நம ;
ஸ்ரீ குரு தேவாய, பரமபுருஷாய ஸர்வ தேவதா வசீகராய
ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்தரச் சேதனாய
த்ரை லோக்யம் வசமாய ஸ்வாஹா।
இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வர சற்குரு அமைவார்।ஈசன் அருளால் அனைத்தும் கைவரப் பெறலாம்। தோல்வியே கிடையாது। புகழ் பெறுவர்। வசீகர சக்தி கிடைக்கும்।துஷ்ட சக்திகள் ஆண்டாது।
"ஓம் அகத்தீசாய நம
ஓம் நந்தீசாய நம
ஓம் திருமூலதேவாய நம
ஓம் கரூவூர் தேவாய நம"
ஓம் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா:-
ஓம் ஸ்ரீ ஸமர்த்த ஸத்குரு ஸாயிநாதாய நம!
"அருணாசல, அருணாசல, அருணாசல பாஹிமாம்
அருணாசல, அருணாசல, அருணாசல ரட்சமாம்"
மஹாதேவம் மஹேசானம் மஹேச்வரம் உமாபதிம்
மஹாஸேனகுரும் வந்தே மஹாபய நிவாரணம்!!
சிவம் சிவகரம் சாந்தம் சிவாத்மானம் சிவோத்தமம்
சிவமார்கப்ரணே தாரம் ப்ரணதோஸ்மி ஸ்தாசிவம்!!
பெருமாள் தமிழ் மந்திரம்
"அரியே, அரியே, அனைத்தும் அரியே!
அறியேன் அறியே அரிதிருமாலை
அறிதல் வேண்டி அடியேன் சரணம்"
திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி!
"தர நக சிவ உரு சிவா சிவா"
ஓம் அண்ணாமலை அரசே போற்றி!
ஓம் உண்ணாமுலை உவந்தாய் போற்றி!!
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி!!
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்தராய நமஹ
"ஓம் நமோ நாராயணாய"
"ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஆதி சக்தி மகா சக்தி பராசக்தி ஓம்"
Posted by தெய்வீக விளக்கங்கள் at 6:22 AM 2 comments
மந்திர உச்சாடனம்
மந்திர உச்சாடனம்:-
ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீ குருவே சரணம்
ஓம் கம் கணபதயே நம;
ஓம வம் கணபதயே நம;
ஓம் பம் கணபதயே நம;
ஓம் லம் கணபதயே நம;
ஓம் ஸ்ரீ அருணாச்சலேஸ்வராய நமஹ!
சிவய சிவ சிவ சிவ நமசிவாய சிவாய நம
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹித்ந்நோ ருத்ர ப்ரசோதயாத்।
"ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷிகணங்கள் திருவடிகள் போற்றி போற்றி"
"பொன்னம்பலம், திருச்சிற்றம்பலம்,அருணாசலம், மஹாதேவ மஹாலிங்க மத்தியார் சுணாஸே"
ஸ்ரீ ருத்ரம்:-
"ஓம் நமஸ்தோ அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபராந்தகாய த்ரிகாலாக்னி காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸ்ர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீ மன் மஹாதேவாய நம"
மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம்:-
"ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம் உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்"
அருணாசலசிவ, அருணாசலசிவ,அருணாசலசிவ, அருணசிவா !அருணாசலசிவ, அருணாசலசிவ,அருணாசலசிவ, அருணசிவா !
"குருசிவ , குருஹரி ,குரு பிரம்மா
குருவே சாட்சாத் பரப்பிரம்மம் !"
வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!
வேலும் மயிலும் துணை
ஓம் சரவணபவ
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் !!!
ஓம் ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரேஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !!!
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி!!
ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் திருவடிகள் போற்றி! போற்றி!!
பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களையும் குறிப்பிடும் ஸ்லோகம்:-
ஸெளராஷ்ட்ரே ஸோமநாதம் ச ஸ்ரீ சைலே மல்லிகார்ஜீனம்!உஜ்ஜயின்யம் மகாகாளம் ஓம் கார மமலேக்ஷ்வரம்!!
பால்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பிமாசங்கரம்!
ஸேதுபந்தே துரோமேசம் நாகேசம் தாருகாவனே!!
வாரணஸ்யம் து விஸ்வேசம் த்ரயம்பகம் கெளதமீடே!ஹிமாலயேது கேதாரம் குஸ்மேசம் ச சிவாலயே!!
Posted by தெய்வீக விளக்கங்கள் at 6:14 AM 0 comments
Tuesday, November 27, 2007
Sri Arunachaleshwara's live darshan anytime
Sri Arunachaleshwara's live darshan anytime :-
ஓம் ஸ்ரீ அருணாச்சலேஸ்வராய நமஹ!
http://www.arunachala-live.com/window.html
let us chant:-
அருணாசலசிவ, அருணாசலசிவ,அருணாசலசிவ, அருணசிவா !அருணாசலசிவ, அருணாசலசிவ,அருணாசலசிவ, அருணசிவா !
எதுவும் என்னுடையது அல்ல, அனைத்தும் உன்னுடையதேஅருளாளா! அருணாசலா!
- சித்தகுருவேத சூக்த மாமந்திரம்
Nothing is mine, Everything is YoursO Merciful Lord! Arunachala!
- Siddha Guru Veda Sooktha Maha Mantram
"அருணாசல, அருணாசல, அருணாசல பாஹிமாம்
அருணாசல, அருணாசல, அருணாசல ரட்சமாம்"
Posted by தெய்வீக விளக்கங்கள் at 4:14 AM 0 comments
தெய்வீக விளக்கங்கள் (sri agasthiya vijayam)
தெய்வீக விளக்கங்கள் (sri agasthiya vijayam)
ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீ குருவே சரணம்
குரு:-
ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாயஸ்ரீ வெங்கடராம சித்த சுவாமிகள் போற்றி! போற்றி!!
பரம குரு:-
ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ சர்ப்ப இரட்சகஸ்ரீ அஸ்திக சித்த சுவாமிகள் போற்றி! போற்றி!!
பரமேஷ்டி குரு:-
ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ காளஹஸ்தீஸ்வரசதா தப சித்த சுவாமிகள் போற்றி! போற்றி!!
பராபர குரு:-ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ மஹரிஷி மஹேஸ்வராயகெளஸ்துப புருஷாய ஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் போற்றி!போற்றி!!
தெய்வீக விளக்கங்கள் (sri agasthiya vijayam):-
http://www.agnisiksha.org/ARCHIVE/
Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்
ஆயுர்வேதம்
மன அழுத்தம் குறைய …
முகத்தின் வசீகரம் காக்க…
பஞ்ச பூதங்களால் பிணி !
பற்கள் பளிச்சிட …
பெரியேனல் நோய் நீங்க…
புளிப்புக்குப் பின் இனிப்பு !
ரத்த அழுத்த ரகசியம் !
கண்ணிலே குறையிருந்தால்
முகம் அழகு பெற ஆயுர்வேதம் கூறும் வழிமுறைகள்
ஆயுர்வேதம் கூறும் நொயற்ற வாழ்வு
ஆஸத்துமாவினால் அவதியா?
ஈரல் புண்ணுக்கு ஆயுர்வேதம் கூரும் மருந்துகள்
தொப்பை ஏற்படுவதர்கு முக்கிய காரணங்கள்
தோலில் ஏற்படும் நோய்கள்
சொத்தைப் பற்கள் தடுக்கும் வழிகள்
இடுப்பு வலியை போக்க ஆயுர்வேதம் கூரும் வழிகள்
பக்கவாதம் நீங்க ஆயுர்வேதம் கூரும் வழிமுறைகள்
அலர்ஜியைப் போக்கும் வழிமுறைகள்
உடலுக்கு பயன்படும் எண்ணெய்கள்
மூலமும் அதன் பயன்களும்
சரகர் கூறும் உணவு முறைகள்
உடல் பருக்கவோ இளைக்கவோ ஆயுர்வேதம் கூறும் வழிகள்
மருத்துவத் துறையின் சிறப்பான வளர்ச்சியை சரகர் கூறும் கருத்து
தடுக்க வேண்டியவை - பாகம் 1 பாகம் 2
ஆயுர்வேதத்தின் சிகிச்சை முறை
ஆயுர்வேதம் காட்டும் வாழ்கை நெறிகள்
ஆயுர்வேதம் கூறும் உடல் பாதுகாப்பு
ஆயுர்வேதம் கூறும் காலநிலை விளக்கம்
ஆயுர்வேதம் கூறும் காலநிலை விளக்கம் - ஹேமந்த காலம்
ஆயுர்வேதம் கூறும் காலநிலை விளக்கம் - இளவேனிற் காலம்
ஆயுர்வேதம் கூறும் காலநிலை விளக்கம் - கார் காலம்
அடிப்படையும் அறிமுகமும் - பாகம் -1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4
எண்ணெய்தேய்ப்பு - பாகம்-1 பாகம்-2
வாத-பித்த-கபங்கள் அமைப்பும் இயக்கமும் பாகம்-1 பாகம்-2
வறண்ட மற்றும் மானாவாரிப் பகுதி மக்களின் உணவு மற்றும் பொருளாதாரத் தன்னிறைவில் சிறுதானியங்களின் பங்கு
Role of Major & Minor Millets for uplifting the people in dry & Rain fed Regions
தமிழ் நாட்டில் சிறுதானியப்பயிர்களின் ஆராய்ச்சியும் அதன் பயன்களும்
Current Research focus of Minor Millets & their utility
தமிழ் நாட்டில் சிறுதானியப்பயிர்களில் இரகங்கள் மேம்பாடு
Varietal improvements in Minor Millets in Tamil Nadu
சிறு தானியங்களில் வீரிய ஒட்டு இரகங்கள்
Hybrids in Minor Millets
வீரிய ஒட்டு இரகங்களின் விதை உற்பத்தித் தொழில் நுட்பங்கள்
Seed Production Technologies in Hybrids of Minor Millets
மக்காச் சோளத்தில் அப்ளோடாக்சின்
Aflotoxins in Maize & Control Measures
சிறுதானியங்களில் பயிர் சாகுபடிக்கேற்ற பயிர் மேலாண்மைத் தொழில் நுட்பங்கள்
Crop Management Technologies in Minor Millets
சிறுதானியப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்
Pest Management in Minor Millets
சிறுதானியப்பயிர்களில் ஏற்படும் நோய்களும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்
Disease Management in Minor Millets
உணவு மற்றும் மதிப்பூட்டப்பட்டப் பொருள்களில் சிறுதானியங்களின் பயன்பாடு
Value Addition in Minor Millets
வறண்ட மற்றும் மானாவாரிப் பகுதி மக்களின் உணவு மற்றும் பொருளாதாரத் தன்னிறைவில் சிறுதானியங்களின் பங்கு
Role of Major & Minor Millets for uplifting the people in dry & Rain fed Regions
தமிழ் நாட்டில் சிறுதானியப்பயிர்களின் ஆராய்ச்சியும் அதன் பயன்களும்
Current Research focus of Minor Millets & their utility
தமிழ் நாட்டில் சிறுதானியப்பயிர்களில் இரகங்கள் மேம்பாடு
Varietal improvements in Minor Millets in Tamil Nadu
சிறு தானியங்களில் வீரிய ஒட்டு இரகங்கள்
Hybrids in Minor Millets
வீரிய ஒட்டு இரகங்களின் விதை உற்பத்தித் தொழில் நுட்பங்கள்
Seed Production Technologies in Hybrids of Minor Millets
மக்காச் சோளத்தில் அப்ளோடாக்சின்
Aflotoxins in Maize & Control Measures
சிறுதானியங்களில் பயிர் சாகுபடிக்கேற்ற பயிர் மேலாண்மைத் தொழில் நுட்பங்கள்
Crop Management Technologies in Minor Millets
சிறுதானியப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்
Pest Management in Minor Millets
சிறுதானியப்பயிர்களில் ஏற்படும் நோய்களும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்
Disease Management in Minor Millets
உணவு மற்றும் மதிப்பூட்டப்பட்டப் பொருள்களில் சிறுதானியங்களின் பயன்பாடு
Value Addition in Minor Millets
தேன்: அதன் பயன்கள்-மருத்துவ டிப்ஸ்
தேன் : இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு
01 உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.
02 தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.
03 தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.
04 தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.
05 இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.
06 தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
07 உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.
08 தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.
09 மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.
10 கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.
11 வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.
12 தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.
13 அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.
14 அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.
15 முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.
16 தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.
17 ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.
18 அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
19 நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.
20 என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.
21 சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். "ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.
22 நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.
23 ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இன்ஷா அல்லாஹ், நிச்சயம் குணம் காண்பார்கள்.
24 மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.
25 படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.
26 ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும்.
27 நூற்றிருபது (120 ) கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது. இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும்.
28 நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.
29 சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது.
30 ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.
31 இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.
32 காதில் ஞொய் என்று சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறதா? மருந்து கடையில் கடுகு எண்ணெய் விற்கிறார்கள். இதைஒரு பாட்டில் வாங்கி வந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை, ஒரு கரண்டியில் எடுத்துக் கொண்டு சூடாக்குங்கள். இலேசான சூடுபோதும். இரைச்சல் கேட்கும் காதில் இரண்டு சொட்டு விடுங்கள். சப்தம் வருவது நின்றுவிடும்.
33 குழந்தை அடிக்கடி பால் கக்குகிறதே, இது நோயா? இல்லை. வயிற்றுப் பொருமலினால் குழந்தை பால் கக்குகிறது. குழந்தைக்கு இதனால் கெடுதல் இல்லை. குழந்தைக்குக் கொடுக்கும் ஆகாரத்தைத் திரவ ரூபத்தில் கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சம் கெட்டியாகக் கூழ் போல் கொடுங்கள்; பால் கக்காது.
34 குழந்தை இல்லாத பெண்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறக்கும். தேன் ஓர் அற்புதமான மருந்து, பெண்களிடத்திலுள்ள மலட்டுத்தனத்தைத் தேன் போக்கி விடுகிறது.
35 தோல் தோய்ந்து போய் சீக்கிரம் வயதான தோற்றம் வந்து விட்டது என்ற கவலை உள்ளதா? இனி அந்த கவலை வேண்டாம். அதற்கான அட்டகாசமான நிவாரணம் உள்ளது.
இரண்டு முட்டைகளை உடைத்து அடித்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் பால், கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் சிறிய குளியல் சவற்கார துண்டுகளை போடவும்.
ஷாம்பு மாதிரி நுரை வரும். இந்த எண்ணெயை உடம்பு முழுவதும் தேய்த்து அலசுங்கள். வாரம் இருமுறை செய்தாலே போதுமானது. தோல் சுருக்கம் ஓடிப்போவதுடன் தோலுக்குத் தேவையான புரத சத்துக்களும் கிடைக்கும்.
மேலும், உடலை சுத்தமாக்கும், எண்ணெய்கள் தோலை இறுக வைக்கும். மேனி மிளிரும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இதன்படி செய்தாலே போதுமானது உங்கள் நிறத்தில் ஏற்படும் மாற்றங்களை உங்களால் உணர முடியும்.
கணினிச் சொற்கள் (Computer Acronyms)
இன்றைய கணினி உலகில் புழங்கும் கணினி துறைச்சார் சொற்றொடர்களில் அதிகமானவை, சுருக்கச் சொற்களாகவே பயன்படுகின்றன. இச்சுருக்கச் சொற்களையும் அவற்றின் முழு சொற்றொடர்களையும் அறிந்துக்கொள்ளல் கணனி உலகப் பயன்பாடுகளை மேலும் எளித்தாக்கிக்கொள்ள உதவுவதுடன், ஆங்கில சொல் ஆளுமையை வளர்த்துக்கொள்ளவும் உதவும்.
நாம் தினமும் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையில் "Cc" யை அழுத்தி ஒரே நேரத்தில் ஒரே மின்னஞ்சலை பலருக்கு அனுப்பவோம். அதேவேளை எல்லோருடைய மின்னஞ்சல் முகவரியும் எல்லோருக்கும் சென்றுவிடாது காக்கும் வகையில் "Bcc" யை அழுத்தி அனுப்புவோம். இவற்றின் முழு சொற்றொடர்கள் என்ன?
Cc - Carbon Copy
Bcc - Blind Carbon Copy
"RAM, PDF" போன்ற சுருக்கச் சொற்களும் எல்லோருக்கும் நன்கு பரிட்சையமான சொற்களே ஆகும். ஆனால் இவற்றின் முழு சொற்றொடர்கள் என்ன?
RAM - Random Access Memory
PDF - Portable Document Format
இவ்வாறான கணினி சுருக்கங்களும் அவற்றின் முழு சொற்றொடர்களும் கீழே; ஆங்கில அகரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. அவற்றை அறிந்துக்கொள்ளல் கணினி துறைக்கு மட்டுமன்றி, ஆங்கில மொழி வளர்ச்சிக்கும் பேருதவியாக அமையும்.
ACL - Access Control List
ADC - Analog-to-Digital Converter
ADF - Automatic Document Feeder
ADSL - Asymmetric Digital Subscriber Line
AGP - Accelerated Graphics Port
AIFF - Audio Interchange File Format
AIX - Advanced Interactive Executive
ANSI - American National Standards Institute
API - Application Program Interface
ARP - Address Resolution Protocol
ASCII - American Standard Code for Information Interchange
ASP - Active Server Page or Application Service Provider
ATA - Advanced Technology Attachment
ATM - Asynchronous Transfer Mode
BASIC - Beginner's All-purpose Symbolic Instruction Code
Bcc - Blind Carbon Copy
BIOS - Basic Input/Output System
Blob - Binary Large Object
BMP - Bitmap
CAD - Computer-Aided Design
Cc - Carbon Copy
CCD - Charged Coupled Device
CD - Compact Disc
CD-R - Compact Disc Recordable
CD-ROM - Compact Disc Read-Only Memory
CD-RW - Compact Disc Re-Writable
CDMA - Code Division Multiple Access
CGI - Common Gateway Interface
CISC - Complex Instruction Set Computing
CLOB - Character Large Object
CMOS - Complementary Metal Oxide Semiconductor
CMYK - Cyan Magenta Yellow Black
CPA - Cost Per Action
CPC - Cost Per Click
CPL - Cost Per Lead
CPM - Cost Per 1,000 Impressions
CPS - Classroom Performance System
CPU - Central Processing Unit
CRM - Customer Relationship Management
CRT - Cathode Ray Tube
CSS - Cascading Style Sheet
CTP - Composite Theoretical Performance
CTR - Click-Through Rate
DAC - Digital-to-Analog Converter
DBMS - Database Management System
DDL - Data Definition Language
DDR - Double Data Rate
DDR2 - Double Data Rate 2
DHCP - Dynamic Host Configuration Protocol
DIMM - Dual In-Line Memory Module
DLL - Dynamic Link Library
DMA - Direct Memory Access
DNS - Domain Name System
DOS - Disk Operating System
DPI - Dots Per Inch
DRAM - Dynamic Random Access Memory
DRM - Digital Rights Management
DSL - Digital Subscriber Line
DSLAM - Digital Subscriber Line Access Multiplexer
DTD - Document Type Definition
DV - Digital Video
DVD - Digital Versatile Disc
DVD+R - Digital Versatile Disc Recordable
DVD+RW - Digital Versatile Disk Rewritable
DVD-R - Digital Versatile Disc Recordable
DVD-RAM - Digital Versatile Disc Random Access Memory
DVD-RW - Digital Versatile Disk Rewritable
DVI - Digital Video Interface
DVR - Digital Video Recorder
ECC - Error Correction Code
EDI - Electronic Data Interchange
EIDE - Enhanced Integrated Drive Electronics
EPS - Encapsulated PostScript
EUP - Enterprise Unified Process
FAQ - Frequently Asked Questions
FIFO - First In, First Out
FiOS - Fiber Optic Service
FLOPS - Floating Point Operations Per Second
FPU - Floating Point Unit
FSB - Frontside Bus
FTP - File Transfer Protocol
GIF - Graphics Interchange Format
GIGO - Garbage In, Garbage Out
GIS - Geographic Information Systems
GPS - Global Positioning System
GPU - Graphics Processing Unit
GUI - Graphical User Interface
GUID - Globally Unique Identifier
HDMI - High-Definition Multimedia Interface
HDTV - High Definition Televsion
HDV - High-Definition Video
HFS - Hierarchical File System
HSF - Heat Sink and Fan
HTML - Hyper-Text Markup Language
HTTP - HyperText Transfer Protocol
HTTPS - HyperText Transport Protocol Secure
I/O - Input/Output
ICANN - Internet Corporation For Assigned Names and Numbers
ICF - Internet Connection Firewall
ICMP - Internet Control Message Protocol
ICS - Internet Connection Sharing
ICT - Information and Communication Technologies
IDE - Integrated Device Electronics or Integrated Development Environment
IEEE - Institute of Electrical and Electronics Engineers
IGP - Integrated Graphics Processor
IM - Instant Message
IMAP - Internet Message Access Protocol
InterNIC - Internet Network Information Center
IP - Internet Protocol
IPX - Internetwork Packet Exchange
IRC - Internet Relay Chat
IRQ - Interrupt Request
ISA - Industry Standard Architecture
ISCSI - Internet Small Computer Systems Interface
ISDN - Integrated Services Digital Network
ISO - International Organization for Standardization
ISP - Internet Service Provider
IT - Information Technology
IVR - Interactive Voice Response
JPEG - Joint Photographic Experts Group
JRE - Java Runtime Environment
JSP - Java Server Page
Kbps - Kilobits Per Second
KDE - K Desktop Environment
KVM Switch - Keyboard, Video, and Mouse Switch
LAN - Local Area Network
LCD - Liquid Crystal Display
LDAP - Lightweight Directory Access Protocol
LED - Light-Emitting Diode
LIFO - Last In, First Out
LPI - Lines Per Inch
LUN - Logical Unit Number
MAC Address - Media Access Control Address
MANET - Mobile Ad Hoc Network
Mbps - Megabits Per Second
MCA - Micro Channel Architecture
MIDI - Musical Instrument Digital Interface
MIPS - Million Instructions Per Second
MP3 - MPEG-1 Audio Layer-3
MPEG - Moving Picture Experts Group
MTU - Maximum Transmission Unit
NAT - Network Address Translation
NetBIOS - Network Basic Input/Output System
NIC - Network Interface Card
NNTP - Network News Transfer Protocol
NOC - Network Operations Center
NTFS - New Technology File System
OASIS - Organization for the Advancement of Structured Information Standards
OCR - Optical Character Recognition
ODBC - Open Database Connectivity
OEM - Original Equipment Manufacturer
OLAP - Online Analytical Processing
OLE - Object Linking and Embedding
OOP - Object-Oriented Programming
OSPF - Open Shortest Path First
P2P - Peer To Peer
PC - Personal Computer
PCB - Printed Circuit Board
PCI - Peripheral Component Interconnect
PCI-X - Peripheral Component Interconnect Extended
PCMCIA - Personal Computer Memory Card International Association
PDA - Personal Digital Assistant
PDF - Portable Document Format
PHP - Hypertext Preprocessor
PIM - Personal Information Manager
PMU - Power Management Unit
PNG - Portable Network Graphic
POP3 - Post Office Protocol
PPC - Pay Per Click
PPGA - Plastic Pin Grid Array
PPI - Pixels Per Inch
PPL - Pay Per Lead
PPM - Pages Per Minute
PPP - Point to Point Protocol
PPTP - Point-to-Point Tunneling Protocol
PRAM - Parameter Random Access Memory
PROM - Programmable Read-Only Memory
PS/2 - Personal System/2
QBE - Query By Example
RAID - Redundant Array of Independent Disks
RAM - Random Access Memory
RDF - Resource Description Framework
RDRAM - Rambus Dynamic Random Access Memory
RFID - Radio-Frequency Identification
RGB - Red Green Blue
RISC - Reduced Instruction Set Computing
ROM - Read-Only Memory
RPC - Remote Procedure Call
RPM - Revenue Per 1,000 Impressions
RSS - RDF Site Summary
RTE - Runtime Environment
RTF - Rich Text Format
RUP - Rational Unified Process
SAN - Storage Area Network
SATA - Serial Advanced Technology Attachment
SCSI - Small Computer System Interface
SD - Secure Digital
SDRAM - Synchronous Dynamic Random Access Memory
SDSL - Symmetric Digital Subscriber Line
SEO - Search Engine Optimization
SERP - Search Engine Results Page
SIMM - Single In-Line Memory Module
SKU - Stock Keeping Unit
SLI - Scalable Link Interface
SMART - Self-Monitoring Analysis And Reporting Technology
SMB - Server Message Block
SMS - Short Message Service
SMTP - Simple Mail Transfer Protocol
SNMP - Simple Network Management Protocol
SO-DIMM - Small Outline Dual In-Line Memory Module
SOA - Service Oriented Architecture
SOAP - Simple Object Access Protocol
SQL - Structured Query Language
SRAM - Static Random Access Memory
SRGB - Standard Red Green Blue
SSH - Secure Shell
SSID - Service Set Identifier
SSL - Secure Sockets Layer
TCP - Transmission Control Protocol
TFT - Thin-Film Transistor
TIFF - Tagged Image File Format
TTL - Time To Live
TWAIN - Toolkit Without An Informative Name
UDDI - Universal Description Discovery and Integration
UDP - User Datagram Protocol
UML - Unified Modeling Language
UNC - Universal Naming Convention
UPnP - Universal Plug and Play
UPS - Uninterruptible Power Supply
URI - Uniform Resource Identifier
URL - Uniform Resource Locator
USB - Universal Serial Bus
VCI - Virtual Channel Identifier
VDU - Visual Display Unit
VFAT - Virtual File Allocation Table
VGA - Video Graphics Array
VLB - VESA Local Bus
VLE - Virtual Learning Environment
VoIP - Voice Over Internet Protocol
VPI - Virtual Path Identifier
VPN - Virtual Private Network
VRAM - Video Random Access Memory
VRML - Virtual Reality Modeling Language
WAIS - Wide Area Information Server
WAN - Wide Area Network
WEP - Wired Equivalent Privacy
Wi-Fi - Wireless Fidelity
WPA - Wi-Fi Protected Access
WWW - World Wide Web
XHTML - Extensible Hypertext Markup Language
XML - Extensible Markup Language
XSLT - Extensible Style Sheet Language Transformation
Y2K - Year 2000
ZIF - Zero Insertion Force
இளமை காக்கும் இளநீர்...
undefined undefined undefined undefined
காலையும் மதியமும் இளநீர் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமாகி சக்தியுடன் செயலாற்றலாம். கல்லீரலைப் பாதுகாத்து நன்கு இயங்கவும் இதில் உள்ள ஸல்ஃபர் உப்பு உதவுகிறது. இதில் ஸல்ஃபர் உப்பு தாராளமாக இருப்பதால் இரத்தம் சுத்தமாவதுடன் தோலையும் சிவப்பாகவும் மாற்றிவிடுகிறது .தான் கருப்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் கொண்டவர்கள், தினமும் இரண்டு இளநீரும், 200 மிலி தக்காளிச் சாறும் ஒருவேளை அருந்தி வந்தால் நிச்சயம் சிவப்பாக மாறிவிடுவர். தக்காளியில் உள்ள
நிலா
undefined undefined undefined undefined
நம்முடைய பூமிக்கு ஒரே ஒரு நிலா உள்ளது. இதைப் போலவே மற்ற கிரகங்களுக்கு நிறைய நிலாக்கள் உள்ளன. சனி கிரகத்திற்கு மட்டும் 61 நிலாக்கள் உள்ளன. இதைத் தவிர சுமார் 200 நிலவுக்குட்டிகள் உள்ளன. இந்த 61 நிலாவில் மிகப்பெரிய நிலவான டைட்டனை ஆராய்வதில் தற்போது விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த டைட்டன் நமது பூமியின் தன்மையை ஒத்திருக்கிறதாம். பூமி என்றால், பூமி சுமார் 450...
பூமிக்கு அருகில் புதிய கிரகம்
undefined
பிரபஞ்சம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டாலும், இன்னமும் அதன் ரகசியத்தை ஆய்வாளர்கள் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. உலகின் பல நாடுகள் விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.விண்வெளி ஆய்வுகளை அமெரிக்கா நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஆய்வு திட்டம் அங்கு தீட்டப்பட்டது. இத்திட்டத்தின்